13 பேர் பலி! திடீரென நுழைந்த பைக்! சடன் பிரேக் பஸ்! கார் மீது மோதி கோர விபத்து!

கார் மீது சுற்றுலா பேருந்து மோதிய விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.


கர்னுல் மாவட்டத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. குறிப்பிட்ட சுற்றுலா பேருந்து, ஐதராபாத்தில் இருந்து, பெங்களூரு நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதாமல் தவிர்ப்பதற்காக, டிரைவர் பேருந்தை திசைதிருப்பியுள்ளார்.

அப்போது, சாலையில் வந்த மற்றொரு ஃபோர்டு குர்கா வாகனம் மீது பேருந்து வேகமாக மோதியது. இதில், கார் அப்பளம் போல நொறுங்கியதுடன், பேருந்தும் பலத்த சேதமடைந்தது. இதில், 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்தனர். இன்னும் சிலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, ஃபோர்டு காரில் வந்த அனைவரும் உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அவர்கள், திருமணம் ஒன்றில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பியபோது இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. இதுபற்றி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.