உடம்பிற்குள் விஷம்..! உடலுறவுத் தடம்..! திருவாரூர் மாணவி மரணத்தில் அடுத்தடுத்த திடுக் மர்மம்!

12-ஆம் வகுப்பு மாணவி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமானது நன்னிலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நன்னிலத்திற்கு உட்பட்ட மகிழாஞ்சேரி கிராமத்தை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி நேற்று முன்தினம் வழக்கம்போல என்னுடைய பாட்டியின் வீட்டில் இரவு நேரத்தில் உறங்கி கொண்டிருந்தார். ஆனால் காலையில் அவர் வீட்டில் இல்லை. உறவினர்கள் அவரை தேடியதில் வீட்டின் பின்புறத்தில் இருந்த வயல்வெளியில் உயிரிழந்து சடலமாக கிடந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இளம் பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

பிரேத பரிசோதனை அறிக்கையில், இளம்பெண் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பெண் வீட்டார் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் ஏற்கனவே தன்னுடைய உறவினருடன் குறும்படத்தில் நடித்து இருந்ததாக காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

காவல்துறையினர் அவர்களில் யாருக்காவது இந்த கொலையில் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.