வகுப்பறையில் மயங்கி சரிந்த மாணவன் துடிதுடித்து உயிரிழந்த அதிர்ச்சி..! அமைச்சர் மகளின் பள்ளிக்கூடத்தில் விபரீதம்!

பள்ளி வளாகத்தில் மயங்கி பிளஸ்-2 மாணவர் உயிரிழந்த சம்பவமானது விருதாச்சலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடலூர் மாவட்டத்தில் விருதாச்சலம் எனும் இடம் அமைந்துள்ளது. இதற்குட்பட்ட அண்ணா நகர் பகுதியில் சந்திரசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வயது 45. இவருடைய மனைவியின் பெயர் லதா. இத்தம்பதியினருக்கு சந்தியா என்ற மகளும், சதீஷ் என்ற 16 வயது மகனும் உள்ளனர்.

சந்திரசேகரன் அதே பகுதியில் பாத்திர வியாபாரம் செய்துவருகிறார். சதீஷ் பெரியவடாபட்டியிலுள்ள செந்தில் மெட்ரிக் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று காலை சதீஷ் வழக்கம்போல பள்ளிக்கு சென்றுள்ளார். காலை 11 மணி அளவில் பள்ளி வளாகத்தில் நின்று கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக பள்ளி நிர்வாகத்தினர் சதீஷை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். 

சதீஷின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் உடனடியாக அவரை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்துள்ளனர். அங்கு சதீஷை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனை கேட்ட சதீஷின் பெற்றோர் பேரதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் காலையில் பள்ளிக்கு நன்றாக சென்ற சதீஷ் திடீரென்று இறப்பதற்கு காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்த வேண்டும் என்றும் சதீஷின் பெற்றோர் மருத்துவமனை வளாகத்தில் போராட்டம் நடத்தினர். போராட்டம் வலுத்ததால் அப்பகுதி தாசில்தார் அரசு மருத்துவமனைக்கு விரைந்தார். 

தாசில்தார் சதீஷின் உறவினர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இறுதியில் சதீஷின் உறவினர்கள், "காவல்துறையினர் விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சதீஷின் உடலை வாங்க மாட்டோம்" என்று கூறி உறவினர்கள் கலைந்து சென்றனர். 

இந்த சம்பவமானது விருதாச்சலத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இந்த பள்ளிக்கூடம் அமைச்சர் ஒருவரின் மகளுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.