நடுராத்திரி..! தங்கை ரூமில் இருந்து வந்த அலறல்! ஓடிச்சென்று பார்த்த அக்காவுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! கன்னியாகுமரி பரபரப்பு!

பொதுத்தேர்வில் குறைவான மதிப்பெண்கள் எடுத்து விடுவோமோ என்ற அச்சத்தில் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவமானது கன்னியாகுமரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கன்னியாகுமரி மாவட்டத்தில் குழித்துறை என்னும் இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகே அமைந்துள்ள பெரியவிளை எனும் இடத்தை சேர்ந்தவர் தங்க மாயன். இவர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முறுக்கு வியாபாரம் செய்து வருகிறார். இத்தம்பதியினருக்கு பிரதீஷா (18), தீபிகா (17) என்று 2 மகள்களும், சர்வேஷ் பாண்டி என்ற 10 வயது மகனும் உள்ளனர்.

தீபிகா அருகிலுள்ள பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இயற்பியல் பொதுத்தேர்வு மிகவும் கடினமாக இருந்துள்ளது. இதனால் தன்னால் தேர்வை சரியாக எழுத முடியவில்லை என்று தீபிகா கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார். 

இதனிடையே பெற்றோர் பக்கத்து ஊருக்கு வேலை நிமித்தமாக சென்றுள்ளனர். தன்னுடைய மன உளைச்சலை சகோதரி பிரதிஷாவிடம் தெரிவித்து ஆறுதல் கொண்டார். பிரதீஷாவும் நல்ல மதிப்பெண் வரும் என்று கூறி தீபிகாவை ஆறுதல் படுத்தியுள்ளார்.

இதையடுத்து தீபிகா தன்னுடைய அறைக்கு தூங்குவதற்காக சென்றுள்ளார். மதிப்பெண் குறைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் இருந்த தீபிகா தன் அருகே யாரும் இல்லாததை பயன்படுத்திக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அலறல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் உடன் இணைந்து வந்து பார்த்தபோது தன் ஆசை தங்கை தூக்கில் தொங்கி கொண்டு இருந்துள்ளார். 

உடனடியாக அக்கம்பக்கத்தினர் தீபிகாவின் உடலை மீட்டு எடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.  

தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.