இரவு பட்டியல் அடைக்கப்பட்ட 129 ஆடுகள்..! காலையில் செத்து சடலங்களாக கிடந்த அதிர்ச்சி சம்பவம்! பதற வைக்கும் காரணம்!

குண்டூர்: இடி, மின்னல் தாக்கி ஒரே இரவில் 129 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்திற்கு உள்பட்ட பாபதலா மண்டல் பகுதியில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இங்குள்ள வேடுலபள்ளி மற்றும் கொத்தப்பாலம் கிராமங்களில் உள்ள வயல்வெளிகளில் செம்மறி ஆடுகளை உரத்திற்காக, கிடை போடுவதைச் சிலர் தொழிலாக செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை அப்பகுதியில் கனமழை பெய்துள்ளது. இதன்போது, நள்ளிரவில் ஏற்பட்ட இடி, மின்னல் தாக்கி அவர்கள் வளர்த்து வந்த 129 செம்மறி ஆடுகளும் பரிதாபமாக உயிரிழந்தன. விடிந்ததும் ஆடுகளின் சடலத்தைப் பார்த்து, உரிமையாளர்கள் கதறி அழுதனர்.  

சம்பந்தப்பட்ட நபர்கள், ஆடுகளை காப்பீடு செய்யவில்லை என்றாலும், அவருக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, ஆந்திர கால்நடைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.