ISIS தீவிரவாதிகள் தொடர்பு! தமிழகம் தான் டாப்! அதிர வைக்கும் ரிப்போர்ட்!

தேசிய புலனாய்வு அமைப்பின் ஐ.ஜி. அலோக் மிட்டல், அளித்த அதிர்ச்சி தகவலில், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு வைத்துள்ள தமிழக இளைஞர்கள் உள்பட 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் நடைபெற்ற தேசிய மாநாட்டில் கலந்து கொண்ட தேசிய புலனாய்வு அமைப்பின் தீவிரவாத எதிர்ப்பு படை மற்றும் சிறப்பு பணிக்குழு தலைவர்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இந்த மாநாட்டில், பேசிய தேசிய புலனாய்வு அமைப்பின் ஐ.ஜி. அலோக் மிட்டல், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய வழக்குகளில் இதுவரை தமிழக இளைஞர்கள் உள்பட 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டுள்ள 127 நபர்களில், அதிகபட்சமாக தமிழக இளைஞர்கள் 33 பேரும், 19 பேர் உத்தரப்பிரதேசத்தில் இருந்தும், 17 பேர் கேரளாவை சேர்ந்தவர்களும், தெலுங்கானாவில் இருந்து 14 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஐ.ஜி. அலோக் மிட்டல் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு வைத்துள்ள 127 பேர்களிடம் நடத்திய விசாரணையில், தமிழகம் மற்றும் கேரளாவில் கைது செய்யப்பட்ட சிலர் இலங்கையில் ஈஸ்டர் திருநாளில் நடந்த குண்டுவெடிப்புக்கு முக்கிய காரணமாக கருதப்படும் ஹாமின் வீடியோக்களை பார்த்துதான் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர தூண்டப்பட்டதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.