புறப்பட தயாரான விமானம்..! கிடுகிடுவென குறைந்த ஆக்சிஜன்! மூச்சுவிட முடியாமல் திணறிய 120 பயணிகள்! திருச்சி திக் திக்!

விமானத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையாக இருந்ததால் திடீரென்று ரத்து செய்யப்பட்ட செய்தியானது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


பூமியிலிருந்து மிக அதிகமான உயரத்திற்குச் செல்கின்றபோது சுற்றுப்புறத்தில் வளிமண்டலத்தின் அழுத்தம் குறைந்துவிடும். அழுத்தம் குறைவதால் காற்றில் கலந்துள்ள ஆக்சிஜனை நுரையீரலால் சுவாசிக்க இயலாத நிலை ஏற்படும்.

விமானங்கள் மிக உயரமாக பறக்கின்ற போது வெளிமண்டலத்திலுள்ள அழுத்ததை வேண்டுமானால் அளவிற்கு குறைத்து, கட்டுப்படுத்தி விமானத்திற்குள் செலுத்துவதற்காக பல்வேறு அமைப்புகள் செய்யப்பட்டிருக்கும். அவ்வாறுதான் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் சிரமமின்றி மூச்சு விடுவர்.

நேற்றிரவு திருச்சியிலிருந்து மலேஷியாவிற்கு செல்வதற்காக விமானம் தயாராக இருந்தது. பயணிகள் விமானத்தில் அமர்ந்த சில நிமிடங்களிலேயே, எழுது சுவாசித்த இயலவில்லை எனக்கு விமான நிர்வாகிகளிடம் குற்றம் கூறியுள்ளனர். நிறைய பயணிகளிடமிருந்து இதேபோன்ற புகார்கள் எழுந்ததால், பயணிகள் அனைவரையும் விமானத்திலிருந்து வெளியே அனுப்பினர். பின்னர் விமானத்தை பரிசோதித்தபோது,  வளிமண்டல அழுத்தத்தை குறைத்து ஆக்சிஜனை விமானத்திற்குள் செலுத்துவதற்கான அமைப்பில் கோளாறுகள் இருந்துள்ளன. இதனால்தான் போதிய ஆக்சிஜன் இல்லாத காரணத்தினால் பயணிகள் மூச்சு முட்டுவதாக கூறியுள்ளனர்.

உடனடியாக விமானத்தை ரத்து செய்தனர். சமயோஜித அறிவு பெற்றிருந்த விமான ஊழியர்களும் செயல்பாட்டினால் 120 பயணிகள் உயிர் பிழைத்தனர். இந்த சம்பவமானது பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.