மகளுடன் படிக்கும் மாணவியை பல முறை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் திருச்சி மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது.
மகளின் 16 வயது தோழியை கர்ப்பமாக்கிய 40 வயது பரோட்டா மாஸ்டர்! பிறகு அரங்கேறிய தரமான சம்பவம்!
திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் அடுத்த மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் நடராஜன்(40). இவர் ஒரு பரோட்டா மாஸ்டர். இவருக்கு15 வயதில் ஒரு மகள் 10ம் வகுப்பு படித்து வருகிறார். மகளும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு 10ம் வகுப்பு படிக்கும் மாணவியும் தோழிகள்.
இவர்கள் ஒன்றாக பள்ளிக்கு செல்வதால் அந்த சிறுமியிடம் சகஜமாக பேசி உள்ளார். அந்த சிறுமியும் சகதோழியின் தந்தை தனக்கும் தந்தை என்ற அடிப்படையில் கள்ளம் கபடமின்றி அவருடைய சுயரூபம் தெரியாமல் பேசி வந்தார்.
தன் மகளும், மனைவியும் வீட்டில் இல்லாத நேரத்தில் தன் மகளை தேடிவந்த அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் நடராஜன். வெளியில் சொன்னால் அவமானம் என அமைதியாக இருந்த அந்த சிறுமியின் பயத்தை தனக்கு சாதமாக்கிக் கொண்ட நடராஜன் பலமுறை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதையடுத்து 15 வயது சிறுமி கர்ப்பம் தரித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் விசாரித்தபோது உண்மை வெளியில் வர ஸ்ரீரங்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து நடராஜன் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே ஒருநாள் அந்த சிறுமி கீழே விழுந்ததால் நடராஜனால் உருவான கர்ப்பம் கலைந்துவிட்டது.. படிப்பையும் அவளால் தொடர முடியவில்லை.
இந்த வழக்கை விசாரித்து வந்த திருச்சி மகிளா நீதிமன்றம் சிறுமியை சீரழித்த நடராஜனுக்கு 12 ஆண்டுகள் சிறை விதித்து தீர்ப்பளித்தார்.