முதலில் பாலியல் வல்லுறவு! பிறகு கரன்ட் ஷாக் வைத்து கொலை! சிறுமிக்கு பிளஸ் 2 மாணவனால் நேர்ந்த கொடூரம்!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து செய்து பின்னர் அவரது உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொலை செய்த அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடமதுரை அருகே உள்ள குரும்பட்டியில் வீட்டில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியை தேட ஆரம்பித்தனர் அப்போது அருகே உள்ள ஒரு முள் புதரின் அருகே சிறுமியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் காவல்துறையினருக்கு புகார் கொடுத்துள்ளனர். பின்னர் தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர்  விசாரணையில் ஈடுபட்டிருந்தனர்.

 அப்போது சிறுமியின் பெற்றோர்கள்  அப்பெண்ணுடன் விளையாடிய சிறுவர்களின் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர் இந்த சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்த போலீசார் அப்பெண்ணின் உடலில் சிறு சிறு காயங்கள் இருப்பதை கண்டறிந்தனர். பின்னர் இது குறித்து விசாரணை நடத்திய போது அதே பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவன் கிருபானந்தன் தான்  சிறுமியை பாலியல்  வன்கொடுமை செய்துள்ளான். என்றும் வன்கொடுமையின் போது உயிருக்கு போராடிய சிறுமியை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்துள்ளான். என போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அந்த மாணவனை கைது செய்த போலீசார் இது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.