உறவினர் வீட்டுக்கு சென்ற 12 வயது சிறுமி! 24 வயது இளைஞனால் நேர்ந்த பதற வைக்கும் சம்பவம்!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 12 வயதுச் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற 24 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.


சாகர் நகரைச் சேர்ந்த சிறுமியும், அவரது பாட்டியும் தொடர்புடைய இளைஞனின் கிராமத்தில் உள்ள தங்களது உறவினர்கள் வீட்டுக்கு கடந்த திங்கட்கிழமை சென்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் உறவினர் வீட்டில் இருந்து காணாமல் போன சிறுமி அன்று மாலை வரை தனது வீட்டுக்கும் செல்லாத நிலையில் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

காவல் துறையினரின் விசாரணையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த விரேந்திர ஆதிவாசி என்ற இளைஞன் அந்தச் சிறுமியை சைக்கிளில் அழைத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவனைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகின.

அந்தச் சிறுமியை வீட்டில் விடுவதாகக் கூறி அவன் தனது சைக்கிளில் அழைத்துச் சென்றதை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் அந்தச் சிறுமியை வீட்டுக்கு அழைத்துச் செல்லாமல் வழியில் உள்ள ஒரு காட்டில் அவன் சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்கார்ம் செய்ததாகவும் பின்னர் கழுத்தை நெறித்துக் கொன்றதாகவும் போலீசார் தெரிவித்தனர். 

ஆதிவாசி மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார், அவனைக் கைது செய்தனர்.