ஊட்டி அருகே கள்ளக்காதல் தெரிந்துபோனதால், பெற்ற மகளையே கழுத்தை நெரித்துக் கொன்ற கொடூர தாய் கைது செய்யப்பட்டார்.
கள்ளக் காதலர்கள் பலருடன் உல்லாசமாக இருந்த தாய்! நேரில் பார்த்த மகளுக்கு நேர்ந்த கொடூரம்!

உதகை அருகே உள்ள கோடப்பமந்து என்கிற பகுதியைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி. இவரது கணவர் ஜகன். இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், தனிமையில் வாடிய ராஜலட்சுமி, வேறொரு ஆண்கூட நெருங்கி பழகி வந்துள்ளார்.
அதேசமயம், ராஜலட்சுமிக்கு, 5ம் வகுப்பு படிக்கும் 12 வயது மகள் இருப்பது, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்துள்ளது. தனது தாயின் கள்ளக்காதலை பலமுறை நேரடியாகப் பார்த்து, அந்த சிறுமி அதிர்ச்சி அடைந்திருக்கிறாள். இதுபற்றி தனது பாட்டியிடம் சிறுமி புகார் கூறியதை தொடர்ந்து, ராஜலட்சுமிக்கு, அவள் மேல் ஆத்திரம் வந்துள்ளது.
இதன்பேரில், சிறுமியை கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டார். ஊஞ்சல் ஆடும்போது, எதிர்பாராவிதமாக, சேலை இறுக்கி, தனது மகள் இறந்துவிட்டதாக, போலீசில் பொய் நாடகம் ஆடியுள்ளார்.
ஆனால், விசாரணையில் உண்மையை கண்டறிந்த போலீசார், ராஜலட்சுமியை கைது செய்தனர். தலைமறைவான அவரது கள்ளக்காதலனையும் போலீசார் தேடி வருகின்றனர். அண்மைக்காலமாக கள்ளக் காதலுக்காக பெற்ற குழந்தைகளையே தாய் என்ற பெயரில் இருக்கும்பேய்கள் கொடூரமாக கொலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.