பெற்ற தாயின் உள்ளாடையை அணிந்த சிறுமி! குழந்தை பாக்கியத்தை இழந்த பரிதாபம்! அதிர வைத்த காரணம்!

சீனாவில் தாயின் உள்ளாடையை அணிந்த 12 வயதுச் சிறுமிக்கு கருக்குழாயையே அகற்ற வேண்டி அவலம் ஏற்பட்டது.


ஒருவரின் ஆடைகளை மற்றவர்கள் பகிர்ந்துகொள்வது சுகாதாரக் கேடு என்பது பலரின் காதுகளில் ஏறுவதே இல்லை. குறிப்பாக உள்ளாடைகளை பகிர்ந்து கொள்வது அவலம் மிக்க அறியாமை என்பதை உணர்த்தும் சம்பவம் சீனாவில் நேர்ந்துள்ளது. 

சீனாவைச் சேர்ந்த ஒரு 12 வயதுச் சிறுமி சுமார் 15 நாட்கள் தொடர்ச்சியான வாந்தி, கடுமையான காய்ச்சல் மற்றும் தீவிர வயிற்று வலியால் அவதிப்பட்டதை அடுத்து பெற்றோர் மருத்துவமனிக்கு அழைத்துச் சென்றனர். 

மருத்துவர்களின் பரிசோதனையில் அந்த சிறுமியின் கருமுட்டைக் குழாய் நீரால் அடைக்கப்பட்டிருந்ததோடு, பெரிதும் சேதம் அடைந்திருந்ததும் தெரிய வந்தது. கூபக அழற்சி நோய் என்னும் இந்த பாதிப்பு பாதுகாப்பற்ற உறவு மற்றும் பல்வேறு நபருடன் உறவு கொள்வது போன்றவற்றால் ஏற்படும் என்று தெரிவித்துள்ள மருத்துவர்கள் பூப்பெய்தி இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆகும் சிறுமிக்கு அது எப்படி சாத்தியம் என்று குழம்பினர். 

இதையடுத்து சிறுமியின் வாழ்க்கை முறை குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்த போது பாதிப்புக்கான காரணம் தெரிய வந்தது. சிறுமியின் உள்ளாடைகள் அவள் தாயின் உள்ளாடைகளுடன் சேர்த்து ஒரே அலமாரியில் வைக்கப்பட்டிருந்ததால் இருவரும் உள்ளாடைகளை மாற்றி மாற்றி பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. 

மேலும் சிறுமியின் தாய் அண்மையில் யோனி அழற்சியால் பாதிக்கப்பட்டதும் தெரிய வந்தது. இந்நிலையில் தாயின் உள்ளாடைகளை அணிந்து வந்த சிறுமியும் அவலத்துக்குரிய பாதிப்புக்கு ஆளானது தெரிய வந்தது. லேப்ராஸ்கோபிக் சிகிச்சை மூலம் சிறுமியின் வலது கருமுட்டை குழாய் மற்றும் வலது கருவகம் ஆகியவற்றை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.