12 வருடங்களுக்கு முன் கடித்த நாய்..! ரத்தம் மூலமாக கண்களுக்குள் ஏறிய 3 அங்குல புழு..! ஹாஸ்பிடலில் காத்திருந்த அதிர்ச்சி!

மும்பை: 70 வயது விவசாயி ஒருவரின் கண்ணில் இருந்து 7 செமீ நீளம் உள்ள புழு அகற்றப்பட்டுள்ளது.


மும்பையை அடுத்த விரார் பகுதியை சேர்ந்தவர் ஜாஷூ படேல். 70 வயதான இவர், விவசாய தொழில் செய்து வருகிறார். 12 ஆண்டுகளுக்கு முன்பாக, இவரை நாய் ஒன்று கடித்திருக்கிறது. இதில் இருந்து படிப்படியாக அவரது கண்ணில் புழு ஒன்று வளர ஆரம்பித்துள்ளது.  

இந்த புழு முதலில் ரத்த நாளங்களில் வளர்ந்து, அங்கிருந்து கண்ணிற்கு இடம்பெயர்ந்து, கண்ணின் அடிப்பகுதியில் தங்கிவிட்டது. இதன்பேரில் ஜாஷூ படேல் குஜராத் மாநிலம் பாருச் பகுதியில் உள்ள நாராயண் ஹாஸ்பிடல் அன்ட் ரிசெர்ச் சென்டர் மருத்துவமனையில் மருத்துவர்களை சந்தித்தார்.  

உடனடியாக மருத்துவரை சிகிச்சைக்கு அனுமதிக்க மருத்துவர்கள், 25 நிமிடங்கள் போராடி அவரது கண்ணில் இருந்த புழுவை அகற்றினர். அந்த புழு 7 செமீ நீளம் இருந்தது. கொசுக்கள், கால்நடைகள் மற்றும் நாய்களில் இருந்து மனிதர்களுக்கு இந்த புழு பரவக்கூடியதாகும். ஆப்ரிக்க நாடுகளில் அதிகளவில் இதன் தாக்கம் இருந்தாலும் தற்போது இந்தியாவிற்கும் பரவ தொடங்கியுள்ளது.

Loa Loa எனப்படும் இந்த புழு மனித உடலுக்கு பரவினால் ரத்தக்குழாய்களில் தங்கி படிப்படியாக வளர்ந்து, பின் கண்ணிற்கு இடம்பெயர்ந்து, கண்ணின் அடிப்பகுதியில் வசிக்க தொடங்கும். பெரும்பாலும்  விவசாய தொழில் செய்வோருக்கு இந்த பாதிப்பு ஏற்படும். இதுதவிர, கால்நடைகள், நாய் மற்றும் கொசு கடிக்கு உள்ளானவர்களுக்கும் பாதிக்க நேரிடும். எனவே, மக்கள் தங்களை பத்திரமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.