வயிற்றை கிழித்தால் அழுகிய ரத்தம்! குடல் இல்லை..! தொப்புள் வழியாக வெளியேறிய மலம்! சீரியசாக இருந்த சிறுவனை காப்பாற்றிய தஞ்சை அரசு டாக்டர்கள்!

அறுவை சிகிச்சையின் போது சிறுவனின் வயிற்றுக்குள் ஒரு லிட்டர் அழுகிய ரத்தமிருந்த சம்பவமானது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


தஞ்சாவூர் மாவட்டத்தில் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு பட்டுக்கோட்டையிலிருந்து 12 வயது இளைஞன் சிகிச்சைக்காக வந்துள்ளார். சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட போது அவருடைய ரத்த அழுத்தம் அதிகமாகவும், வயிறு வீங்கியும் இருந்துள்ளது. உடனடியாக அந்த இளைஞனுக்கு நரம்பு வழியாக குளுக்கோஸ் மற்றும் ஆன்ட்டிபயாட்டிக் செலுத்தப்பட்டது.

வயிறு வீங்கிப்போனது. மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்தபோது குடல் அடைப்பு இருந்ததாக தெரிய வந்தது. இதனை சரி செய்வதற்கு அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டனர். அவ்வாறு அறுவை சிகிச்சை செய்தபோது ஒரு லிட்டர் அழுகிய ரத்தம் வயிற்றிலிருந்து வெளியே வந்தது. குடல் வெகுவாக அழுகி இருந்தது. ரத்த ஓட்டம் இல்லாததால் குடல் அழுகியதாக கூறப்பட்டது.

அறுவை சிகிச்சை அரங்கம் முழுவதும் துர்நாற்றம் வீசியது. குடல் அறுவை சிகிச்சை செய்தால் ஐந்து நாட்களுக்கு உணவு அளிக்கப்பட மாட்டாது. இந்த இளைஞரை செவிலியர்கள் நன்றாக பார்த்துக்கொண்டனர். 6-வது நாளிலிருந்து தண்ணியும், இளநீரும் கொடுக்கப்பட்டது.

இதனிடையே எதிர்பாராவிதமாக தொப்புளிலிருந்து மலம் வரத்தொடங்கியது. இதற்கு காரணம் தையல் விட்டுப்போனதாகும். மீண்டும் அறுவை சிகிச்சை செய்யாமல் நரம்புகள் மூலம் குளுக்கோஸ், சத்துப்பொருட்கள் முதலியவற்றை செலுத்தினோம். அதன் பின்னர் தொப்புளிலிருந்து வரும் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது.

கிட்டத்தட்ட 25 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் இவர்களிடம் எந்த கட்டணமும் அரசு மருத்துவமனை பெறவில்லை. மேலும் இதுபோன்ற ஆண்டிற்கு பல்லாயிரக்கணக்கான உயிர்கள் அரசு மருத்துவமனையில் காப்பாற்றப்படுகின்றன. ஆனால் விளம்பரம் இல்லாததால் அதை வெளியில் தெரிவதில்லை.

இந்த சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் 10 முதல் 12 லட்சம் செலவாகியிருக்கும். மேலும், இதற்கு பிரதமரின் திட்டம் தான் காரணம் என்று பாஜக தகவல் தொழில்நுட்பத் துறை பெருமை கொள்ள, அதற்குள் நெட்டிசன்கள் தமிழகத்தில் ஏற்கனவே அரசு மருத்துவமனை சிகிச்சை இலவசம் தான் என்று பதிலடி கொடுத்தனர். இந்த சம்பவமானது மிராசுதார் அரசு மருத்துவமனையில் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.