உடலின் 30 இடங்களில் சதக் சதக்! மர்ம உறுப்பு துண்டிப்பு! 12 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்!

அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவரை உடலில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அர்ஜென்டினா நாட்டை சேர்ந்தவர் டியாகோ ரோமன். இவருடைய வயது 12. இவர் புதன்கிழமையன்று தன் வீட்டிலிருந்து பள்ளிக்கூடத்திற்கு சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவர் மாயமாகிவிட்டதாக கருதி அவருடைய தாயார் அப்பகுதி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். 

இந்நிலையில் மறுநாள் அவருடைய உடல் சாண்டா பேவில் உள்ள ரெக்ரியோ நகராட்சியில் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டவர்கள் தடவியல் ஆய்வாளர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தடவியல் ஆய்வாளர்கள் சிறுவனின் உடலை கண்டு பேரதிர்ச்சி அடைந்தனர். அவருடைய உடலில் 30க்கும் மேற்பட்ட இடங்களை கூர்மையான ஆயுதங்கள் கிழித்துள்ளன என்றும், அவருடைய ஆணுருப்பும் வெட்டப்பட்டுள்ளது என்றும் உள்நாட்டு ஊடகங்களில் கூறப்படுகிறது. 

உடனே கண்ட தடவியல் நிபுணர் ஒருவர் கூறுகையில், "நான் 20 ஆண்டுகளுக்கு மேற்பட்டு தடவியல் துறையில் பணிபுரிந்து வருகிறேன். இது போன்ற ஒரு கோர விபத்தை கண்டதில்லை. ஆணுறுப்பு வெட்டப்பட்டும், 30-க்கும் மேற்பட்ட இடங்களில் படுகாயமடைந்தும் ஒரு உடல் இருப்பதை இப்போது தான் காண்கிறேன். இது ஒரு விஞ்ஞான விசாரணைக்கு உட்பட்ட நிகழ்வாக கருதுகிறேன்" என்று கூறியுள்ளார்.

டியாகோவின் உடலானது அவர்களைவிட ஃபுட்பால் கிளப்பின் மைதானத்தில் அந்த கிளப்பின் துணைத்தலைவரால் கண்டறியப்பட்டது. டியாகோவின் தாயாரான மரியா தன்னுடைய முன்னாள் காதலன் இந்த கொலையை செய்திருக்கக்கூடும் என்று தான் நம்புவதாக காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.

இந்த சம்பவமானது அர்ஜென்டினா நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.