ஏண்டா நுழைறதுக்கு ஒரு இடம் இல்லையா? வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்!

சுவர்களுக்கு இடையே சிக்கிய பள்ளி மாணவனை 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்புப்படையினர் மீட்டெடுத்த சம்பவமானது செங்குன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


செங்குன்றம் பகுதியில் முன்டியம்மன் நகர் எனுமிடம் அமைந்துள்ளது. இப்பகுதிக்குட்பட்ட அசோக் தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகனின் பெயர் நித்திஷ். நித்தீஷின் வயது 12. அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று தன்னுடைய வீட்டின் சுற்றுச்சுவருக்கு அருகே நித்தீஷ் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது சுற்றுச்சுவருக்கும், அருகே இருந்த தூணின் நடுவிலே நித்திஷ் செல்ல முயன்றுள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக நித்திஷ் சிக்கிக்கொண்டான். 

எவ்வளவோ முயன்றும் அவனால் எளிதில் வெளிவர இயலவில்லை. இதனிடையே அவன் கூச்சலை கேட்ட பெற்றோர் நித்திஷை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் இயலவில்லை. உடனடியாக அவர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர், முதலில் தூணின் முன்பகுதியை சுத்தியலால் உடைத்தனர். அதன்பின்னர் நித்திஷ் அணிந்திருந்த ஆடையை கத்திரிக்கோலால் கிழித்தெறிந்தனர்.

சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு நித்திஷை தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டு எடுத்தனர். உடனடியாக அவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. தற்போது நித்தீஷ் நலமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவமானது செங்குன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.