திருவனந்தபுரம்: கொரோனா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் உள்ள தியேட்டர்கள் தற்காலிகமாக மூடப்படுகின்றன.
அடுத்தடுத்து 12 பேருக்கு கொரானா..! திரையரங்குகள் மூடப்பட்டன..! பள்ளிகளுக்கு விடுமுறை! தேர்வுகள் ரத்து! எங்கு தெரியுமா?

கேரளாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், அவர்களுடன் பழகிய கேரள மக்கள் உள்பட 12 பேருக்கு அடுத்தடுத்து கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதாக கண்டறியப்பட்டது. இதையடுத்து, மக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகள் அனைத்தையும் கேரள அரசு கண்காணிக்க தொடங்கியுள்ளதோடு,
அவற்றுக்கென கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்டவற்றுக்கு படிப்படியாக விடுமுறை அறிவிக்கப்பட்டு வகிறது. இதுதவிர திருமண விழாக்களில் மக்கள் அதிக கூட்டம் கூடாமல், கணிசமான அளவில் பங்கேற்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர சபரிமலை செல்லும் பக்தர்கள் அதிகளவில் செல்ல வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதுதவிர தியேட்டர்களுக்கு விடுமுறை விடும்படி முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டிருந்தார். இதையேற்று, மார்ச் 11 தொடங்கி, மார்ச் மாதம் முடியும் வரை கேரளா முழுக்க தியேட்டர்கள் மூடப்படுவதாக, அம்மாநில தியேட்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதேபோல, மார்ச் 13ம் தேதி தொடங்க உள்ள மாத பூஜைக்காக, சபரிமலைக்கு பக்தர்கள் யாரும் வரவேண்டாம் என்று ஏற்கனவே தேவசம் போர்டு அறிவித்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.