12 அடி நீளம்! 2 அடி அகலம்! குலை நடுங்க வைத்த ராஜநாகம்! ஆனால் இந்த இளைஞன் செய்வதை பாருங்கள்..!

12 அடி நீள ராஜநாகத்தை வனத்துறையினர் திறம்பட மடக்கிப் பிடித்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது


கர்நாடகா மாநிலத்தில் வஜ்ராபேட்டை என்னும் இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் நிறைய குடியிருப்புகள் ஒட்டி அமைந்துள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு அருகே அடர்ந்த காடு உள்ளது.

அவ்வப்போது காட்டிலிருந்து மிருகங்கள் இந்த பகுதிக்கு வருவது அரங்கேறியுள்ளது. இதனிடையே சில நாட்களுக்கு முன்னர் காட்டுப்பகுதியில் இருந்து 12 அடி நீளமான ராஜநாகம் ஒன்று வஜ்ராபேட்டை குடியிருப்புக்குள் நுழைந்துள்ளது.

பாம்பின் சத்தத்தைக் கேட்டு அலறிய குடியிருப்புவாசிகள் அதனை தேடி அலைந்தனர். அப்போது 12 அடி நீளமான ராஜநாகத்தை கண்டு பொதுமக்கள் பேரதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பாம்பின் இருப்பிடத்தை பார்த்தனர். பின்னர் குழாய் போன்ற கருவியின் மூலம் பாம்பை கட்டுப்படுத்தினர். பாம்பின் வீரியம் குறைய குறைய வனத்துறையினர் அதனை மடக்கி பிடிக்க முயன்று வந்தனர். ஒருவழியாக பாம்பு படம் எடுப்பதை நிறுத்திய பிறகு, எளிதாக அதனை பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை பத்திரமாக வனத்தில் கொண்டு சேர்த்தனர்.

இந்த பாம்பு பிடிக்கும் சம்பவத்தின் வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.