12 அடி நீளம்..! படம் எடுத்து நின்ற பிரமாண்ட ராஜநாகம்! அதிரடியாக முன்னே வந்த ஈஷா யோகா சன்னியாசி! பிறகு அரங்கேறிய திக்திக் நிமிடங்கள்!

கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு செல்லும் வழியில் உள்ள ஓடையில் 12 அடி நீள ராஜநாகம் இருந்துள்ள சம்பவமானது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.


கோயம்புத்தூர் மாவட்டத்தில் வெள்ளையங்கிரி என்னும் பகுதியில் ஈஷா யோகா மையம் செயல்பட்டு வருகிறது. ஈஷா யோகா மையத்திற்கு செல்லும் ஓடையின் அருகே 12 அடி நீளமுள்ள கரு ராஜா பாம்பு இருந்துள்ளது.

இதனை கண்டவுடன் அதிர்ச்சியடைந்த அவ்வழியே செல்லும் பொதுமக்கள் ஈஷா யோகா மையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக யோகா மையத்தை சேர்ந்த ஒருவர் விரைந்து வந்து பாம்பை பிடித்து கொடுத்தார்.

அதன்பின்னர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த வனத்துறையினர் பாம்பை சாக்குப்பைக்குள் கட்டி அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்றனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.