த‌மிழக‌த்த‌ி‌ல் ஒரே நாளில் கொரோனாவுக்கு 12 பேர் பலி!

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, இன்று மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.


இவர்களில் ஒருவர் மட்டும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர், மற்றவர்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள். மாநில அளவில் இன்று மட்டும் 827 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று 559 பேர் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.  

தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,372-ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12,757-ஆகியுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாவால் 145 பேர் உயிரிழந்துள்ளனர். 

இன்றைக்கு மட்டும் 639 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர். இதுவரை தமிழக அளவில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் 10,548 பேர் என்று நலவாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தெரிவித்துள்ளார்.