கலர் புல்லான பாஜக அலுவலகம்! ஒரே நாளில் 12 நடிகைகள் கட்சியில் இணைந்தனர்!

டெல்லி: வங்காள மொழி சினிமா, டிவி நடிகர்கள் பலரும் ஒரே நாளில் பாஜக.,வில் சேர்ந்துள்ளனர்.


பாஜகவில் இணைந்த வங்காள சினிமா, டிவி நடிகர்கள். மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியாக திரிணாமூல் காங்கிரஸ் உள்ள நிலையில், பாஜக.,விற்கும், அக்கட்சிக்கும் நேரடி கருத்து மோதல் நிலவுகிறது. இந்நிலையில், சமீப நாட்களாக, மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் பாஜகவில் இணைவது வாடிக்கையாக மாறியுள்ளது.

இதன்படி, மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ், அக்கட்சியின் மூத்த தலைவர் முகுல் ராய் தலைமையில் டெல்லியில் நடைபெற்ற மாற்று கட்சியினர் பாஜக.,வில் இணையும் நிகழ்வில், வங்காள  சினிமா, டிவி நடிகர்கள் 12 பேர் நேரில் வந்து, பாஜக.,வில் தங்களை இணைத்துக் கொண்டனர். 

இவர்களில், ரிஷி கவுசிக், காஞ்சனா மொய்த்ரா, ருபாஞ்சனா மித்ரா, பிஸ்வஜித் கங்குலி  ஆகியோர் இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். படிப்படியாக, பாஜக.,விற்கு மேற்கு வங்கத்தில் செல்வாக்கு அதிகரிக்க தொடங்கியுள்ளதாக, இந்நிகழ்ச்சியில் பேசிய நிர்வாகிகள் பலரும் குறிப்பிட்டனர்.