கடைசியா ஒரு போஸ்...! பிறகு அடுத்தடுத்து பலி! மனதை ரணமாக்கிய நண்பர்கள் 4 பேரின் துர் மரணம்! அதிர வைக்கும் காரணம்!

ஆந்திராவில் நண்பர்கள் 5 பேர் கொண்ட குழு கடலில் குளிக்கச் சென்றபோது பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீகாகுளம் பகுதியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 5 பேர் நண்பர்களாக இணைந்து அருகிலிருந்த கடலுக்கு குளிப்பதற்காக சென்றிருக்கின்றனர். ஐந்து பேரும் மகிழ்ச்சியாக குளித்துக் கொண்டிருந்த நிலையில் மிகப் பெரிய ராட்சச அலை ஒன்று கடலில் எழுந்துள்ளது . அந்த அலையில் சிக்கி 5 பேரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.

இந்த கடல் அலையில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் . அதில் ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். உயிர்தப்பிய அந்த மாணவர் மட்டும் அருகில் இருந்த மீனவர்களை அழைத்து அவர்களிடம் நடந்ததை கூறி உதவி கேட்டார். அவர்களும் கடலுக்குள் சென்று மற்ற நால்வரையும் தேடி அலைந்தனர். மேலும் தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் ஆகியோரும் கடலில் சென்று நால்வரையும் தேடியுள்ளனர். துரதிஸ்டவசமாக 4 பேரது உடல்கள் மட்டுமே பொலிஸாரால் மீட்கப்பட்டது. 

பின்னர் இந்த சம்பவத்தை பற்றிய தகவல்களை அவர்களது பெற்றோரிடம் கூறப்பட்டது இதனை அறிந்து வந்து இறந்துபோன மாணவர்களின் பெற்றோர் , "எவ்வளவோ சொன்னேன் நீ கடலுக்கு குளிக்க போக வேண்டாம் " என கதறி அழுதனர். மாணவர்களை ஐந்துபேரும் குளிப்பதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்பாக ஒன்றாக இணைந்து போட்டோக்கு போஸ் அளித்துள்ளனர் . தற்போது அந்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது ‌