எல்லார் முன்னாடியும் அப்படி செய்யச் சொன்னார்..! கணக்கு வாத்தியாரின் விபரீத செயலால் 11ம் வகுப்பு மாணவி எடுத்த பகீர் முடிவு!

தூத்துக்குடியில் விடுமுறை எடுத்ததற்காக ஆசிரியர் கடுமையாக நடந்துகொண்டதால் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தை சேர்ந்த கருணாகரன், பூரணச்செல்வி தம்பதியின் 16 வயது மகள் ஐஸ்வர்யா அரசு உதவி பெறும் விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். வீட்டில் பாட்டி இறந்து விட்டதால் 2 நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் இருந்த ஐஸ்வர்யா 3வது நாள் பள்ளிக்கு சென்றபோது கணினி அறிவியல் ஆசிரியர் ஞானப்பிரகாசம் கோவமாக திட்டியதாகவும், 50 முறை தோப்புக்கரணம் போட சொன்னதாகவும், அதுமட்டுமின்றி மைதானத்தில் ஓடச்சொன்னதாகவும் கூறப்படுகிறது. மேலும் விடுமுறை எடுத்த காரணத்தால் இரண்டாம் இடைப் பருவத்தேர்வையும் எழுத ஞானபிரகாசம் அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. 

இதனால் மனமுடைந்த ஐஸ்வர்யா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலிசார் ஐஸ்வர்யாவை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து பள்ளியை முற்றுகையிட்ட ஐஸ்வர்யா உறவினர்கள் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டம் செய்தனர். மேலும் விடுமுறை எடுத்த ஒரே காரணத்தால் ஒரு ஆசிரியர் இப்படியா தண்டனை தரவேண்டும் என்றும் ஆசிரியர் ஞானபிரகாசம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர்.

மாணவர்களும் அந்த ஆசிரியர் மீது குற்றச்சாட்டு வைத்தனர். அவரது கெடுபிடியால் 2 மாணவர்கள் பள்ளிக்கு வருவதையே நிறுத்திவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்தபோது, திங்கட்கிழமை பள்ளி திறந்தவுடன் ஆசிரியரிடம் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.