திருட்டு பட்டம்! கன்னத்தில் அறைந்த 48 பேர்! விடுதியில் பள்ளி மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்! பிறகு அரங்கேறிய துயரம்!

11-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் விடுதியில் சடலமாக கிடந்த சம்பவமானது உத்தரபிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உத்திரப்பிரதேச மாநிலத்தில் சுபாஷ் சந்திரா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகளின் பெயர் அனுஷ்கா. அனுஷ்கா ஜவஹர் நவோதயா வித்யாலயா என்னும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். பள்ளிக்கு அருகே உள்ள விடுதி ஒன்றில் தங்கி படித்து வந்தார்.

6 மாதங்களுக்கு முன்பாக நடந்த சம்பவம் ஒன்றில் அனுஷ்காவின் மீது பள்ளி நிர்வாகத்தினர் திருட்டு பட்டம் கட்டினர். விடுதி மெய்க்காப்பாளர் 48 மாணவிகளை அனுஷ்காவின் கன்னத்தில் அறையுமாறு கூறியுள்ளார். அதன்பிறகு அவருடைய பள்ளியில் இந்த சம்பவம் நிகழ்ந்தாலும் அனைவரும் அனுஷ்காவை குற்றம் சாட்டுவதையே வழக்கமாக கொண்டிருந்தனர்.

எதிர்பாராவிதமாக நேற்று அதிகாலை 5:30 மணி அளவில் அனுஷ்கா தன்னுடைய விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை சக மாணவியர்கள் கண்டுள்ளனர். உடனடியாக அவர்கள் கெடுதி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக விடுதி நிர்வாகத்தினர் விரைந்து செயல்பட்டு மாணவியின் உடலை மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். ஆனால் மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். அவருடைய உடலில் ஆங்காங்கே ரத்த காயங்கள் இருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனைக்கு சென்று இறந்த மாணவியின் உறவினர் அவர் இறந்த செய்தியை அவருடைய பெற்றோரிடம் கூறியுள்ளார்.

உடனடியாக அவருடைய பெற்றோர் விரைந்து வந்து அப்பகுதி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதாவது தன்னுடைய பெண் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பள்ளி அதிபரால் மிகவும் கொடுமைப்படுத்தப்பட்டதாக புகாரில் கூறியுள்ளார். மேலும் அதற்கு பெண் விடுதி காப்பாளரும், அஜய் என்கிற பள்ளி மாணவரும் உடந்தையாக இருந்ததாக புகாரில் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் உத்தரபிரதேச மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.