வீங்கிக் கொண்டே சென்ற வயிறு! வீட்டிலேயே வெளியே வந்த சிசு! குழி தோண்டி புதைத்த பெற்றோர்! மாணவிக்கு நேர்ந்த விபரீதம்!

தூத்துக்குடியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பெற்றெடுத்த சிசுவை வீட்டிலேயே குழிதோண்டி புதைத்த பெற்றோர்கள். இதற்கு காரணமாக இருந்த கோவில் பூசாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தூத்துக்குடி மாவட்டம் வாகைக்குளம் அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு நீண்ட நாட்களாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே மாணவியின் வயிறு வீங்கிக் கொண்டு சென்றுள்ளது.

இந்நிலையில் இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த மாணவி வயிற்றுவலி எனக்கூறி மெடிக்கலுக்கு சென்று மருந்து மற்றும் மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு வந்துள்ளார். எனினும் மாத்திரை சாப்பிடும் போது மட்டுமே வயிற்று வலி சற்று குறைந்ததாகும் மற்ற நேரங்களில் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது.

அதை கண்டுகொள்ளாத மாணவி எப்போதும் போல் பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இதையடுத்து மாதங்கள் செல்ல செல்ல அவரது வயிறு மேலும் பெரிதாகிக்கொண்டே சென்றது. இதையடுத்து அங்கு உள்ள மருத்துவச்சியிடம் கேட்டபோது மாணவி கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த செய்தியை அறிந்த மாணவியின் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து மருந்து மற்றும் மாத்திரைகளை உட்கொண்டதில் மாணவியின் வயிற்றில் இருந்த சிசுவை இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து 6 மாதத்திலேயே இருந்த நிலையில் குழந்தை பெற்றெடுத்துள்ளார். இதையடுத்து இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் அசிங்கமாகிவிடும் என எண்ணிய பெற்றோர் இறந்து பிறந்த சிசுவை தங்களது வீட்டின் அருகிலேயே குழிதோண்டி புதைத்துள்ளனர்.

இந்நிலையில் இதையறிந்த அருகில் இருந்த நபர் ஒருவர் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர். பெற்றோரிடம் விசாரணை நடத்தினர் அப்போது அந்த மாணவி தினமும் காலையில் கோவிலுக்கு சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் அங்கு பூசாரியாக இருக்கும் ராஜ் 48, என்பவர் மாணவியுடன் தினமும் நன்றாக பேசி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் ராஜ் என்பவர் மாணவியை அடைந்துவிட வேண்டும் என திட்டம் தீட்டியுள்ளார். இதையடுத்து மாணவியை தனது வீட்டிற்கு தனிமையில் அழைத்துச்சென்றுள்ளார். அப்போது அங்கு சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மாணவியை பலாத்காரம் செய்துள்ளார்.

இதையடுத்து இச்சம்பவம் குறித்து வெளியில் யாரிடமும் தெரிவிக்க கூடாது எனவும் தெரிவித்தால் கொன்று விடுவேன் எனவும் ராஜ் மிரட்டியதாக தெரிகிறது. இதையடுத்து மாணவி யாரிடமும் தெரிவிக்காமல் இருந்துள்ளார்.மாணவி கர்ப்பமடைந்து அவருக்கே தெரியாமல் இருந்துள்ளது. சாதாரண வயிற்று வலி தான் எனக் கூறி பல்வேறு மருந்துகளை சாப்பிட்டு வந்த நிலையில் குழந்தை ஆறு மாதத்திலேயே இறந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பூசாரி ராஜ் என்பவரை கைது செய்துள்ளனர்.