3 ஆசிரியைகள் என்ன பிடிச்சிருந்தாங்க..! ஒரு சார் வந்த டிரஸ்ஸ கழட்டினார்! கோவை 11ம் வகுப்பு மாணவனின் பகீர் வாக்குமூலம்!

கோவை: மாணவனை ஆடை அவிழ்த்து பரிசோதனை செய்த ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.


கோவை மாவட்டம், சூலூரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு, 11ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன்  வகுப்பறையில் செல்ஃபோன் வைத்திருந்ததாக, அவனது ஆசிரியர் ஒருவர் புகார் செய்தார்.

இதன்பேரில், அவனை ஓய்வறைக்கு அழைத்துச் சென்ற ஆசிரியர்கள் 3 பேர் அசையாமல் பிடித்துக் கொள்ள, பள்ளியின் முதல்வர் அங்கே வந்து, மாணவனின் ஆடையை அவிழ்த்து, நிர்வாணமாக நிற்கச் செய்து, பிறகு, உடல் முழுக்க கை வைத்து, செல்ஃபோன் எங்கேயும் ஒளித்து வைத்துள்ளானா என தேடியுள்ளார்.

இதனால் மிகவும் மன உளைச்சல் அடைந்த மாணவன், இதுபற்றி தனது பெற்றோர் உதவியுடன் போலீசில் புகார் செய்துள்ளான். அதேசமயம், இதனை சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளது. ''மாணவன் வகுப்பறையில் செல்ஃபோன் வைத்துக் கொண்டு, மாணவிகளை வீடியோ எடுத்ததை கண்டித்ததால் பொய் புகார் செய்துள்ளான்.

அவனை பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளோம்,'' எனவும் அந்த பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே போலீஸ் புகாரை விசாரித்த போலீசார், சம்பந்தப்பட்ட பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் 3 பேர் மீதும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.