என்ன பார்த்தாடி சிரிக்குற..! சக மாணவி கன்னத்தில் ஓங்கி அறைந்த பிரவீன்! பள்ளி நிர்வாகம் கொடுத்த விபரீத தண்டனை! பிறகு அரங்கேறிய பயங்கரம்!

திருச்சியில் சக மாணவர்கள் கேலி செய்தாக கூறி பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் மனம் உடைந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெற்றோர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுதியுள்ளது.


இந்நிலையில், பிரவீனின் தந்தை துரைராஜ் அவர்கள் மலேசியாவில் பணிபுரிந்து வரும் நிலையில் பிரவீன் தாயின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். இதற்கிடையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சக மாணவியை ஒருவரை பிரவீன் காதலித்து வந்துள்ளார். ஆனால் இவர்களின் காதல் கதை வீட்டுக்கு தெரிய வர மாணவியின் பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து மாணவனின் தாயரையும் கண்டித்துள்ளனர்.

 இந்நிலையில், அந்த மாணவி பிரவீனுடன் பேசுவதையும், பழகுவதையும் நிறுத்திக் கொண்டார். மாணவி பேசுவதில்லை என்று வருந்தி பிரவீன் படிப்பில் கவனம் செலுத்தாமல் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்துள்ளார். இதனால் ஆசிரியர்கள், மாணவிகள் முன்பு நிறுத்தி வைத்து பிரவீனை அவமானப்படுத்தும் விதமாக நடத்தி உள்ளார். இதைப் பார்த்து மாணவி ஒருவர் பிரவீனை கேலி செய்து உள்ளார். 

மாணவி கேலி செய்ததில் ஆத்திரம் அடைந்த பிரவீன், அந்த மாணவியை கன்னத்தில் அறைந்தார். பின்னர் பள்ளி நிர்வாகம் அதற்கு தண்டனையாக அவரை 10 நாட்கள் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளது.

மீண்டும் 10 நாட்கள் கழித்து பள்ளிக்குச் சென்ற பிரவீனை பள்ளி நிர்வாகம் நாள் முழுவதும் காத்திருக்க வைத்து வீட்டுக்கு திருப்பி அனுப்பி உள்ளது. இரு தினங்கள் சென்று காத்திருந்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய பிரவீன் பின்னர் தாயை அழைத்துச் சென்றுள்ளார்.

மறுபடியும் அவர்களை காத்திருக்க வைத்துள்ளனர். பின்னர் பள்ளி நிர்வாகத்தை கேட்டததில் அவரை பள்ளியைவிட்டு நீக்கியதாக தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் சக பள்ளி மாணவர்களுக்கு தெரிந்த நிலையில், மீண்டும் பிரவீனை கேலி செய்துள்ளனர். இந்த நிலையில் மன உளைச்சலுடன் வீட்டிற்கு வந்த பிரவீன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

வெளியில் ஒருந்து வீட்டுக்கு வந்து பார்த்த தாய் அதிர்ச்சியில் உரைந்தார். தனது மகனின் இந்த விபரீத முடிவுக்கு பள்ளி நிர்வாகத்தின் கெடுபிடியான நடவடிக்கையே காரணம் என்று சரமாரியாக சாடியுள்ளார். 

மாணவின் உறவினார்கள் மற்றும் பெர்றோர்கள் முசிறி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் பிரவீனின் தாய் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும், முதல் அமைச்சரின் தனிப்பிரிவிற்கும் புகார் அளித்துள்ளார். ஆனால் பள்ளி நிர்வாகமோ மாணவர் பிரவீனிடம் தாங்கள் எந்த கெடுபிடியும் காட்டவில்லை என்று கூறியுள்ளது.

மேலும், அவர் மாணவியை தாக்கியதால் தங்கள் நிர்வாகத்தில் உள்ள வேறு பள்ளிக்கு மாற்றியதாகவும் விளக்கம் அளித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.