6 மாதம் கர்ப்பமாக இருந்த 11ம் வகுப்பு மாணவி! பிரேதப் பரிசோதனையில் டாக்டர்கள் கூறிய பகீர் தகவல்!

திருச்சியில் தற்கொலை செய்து மாணவியின் மருத்துவ பரிசோதனை அறிக்கையில் அவர் 6 மாத கர்ப்பமாக இருப்பதை அறிந்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 11 வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி ஒருவர் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த சில வாரங்களாகவே மாணவி பெற்றோரிடம் சரிவர பேசாமல் இருந்துள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர்கள் காரணம் கேட்டபோது மாணவி ஏதும் கூறவில்லை என தெரிகிறது. பள்ளி மாணவி இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது நிலையில் அவர்கள் இருவரும் தனிமையில் பல்வேறு இடங்களுக்கு சுற்றி திரிந்தனர் இதன் காரணமாக மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் வீட்டில் தெரிந்தால் பெரிய ஆபத்தாகிவிடும் என மாணவி அச்சம் அடைந்துள்ளார் .இந்நிலையில் இளைஞருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த வாரம் பள்ளிக்கு சென்றுவிட்டு மாலை வேளையில் வீடு திரும்பிய மாணவி வீட்டில் இருந்த எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதையடுத்து இதைப்பார்த்த பெற்றோர்கள் உடனே மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.இந்நிலையில் மாணவிக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் 6 மாத கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் தங்களது மகளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து மருத்துவர்கள் மாணவியின் வயிற்றில் உள்ள சிசுவை வெளியே எடுத்தால் தான் மாணவியின் உயிரை காப்பாற்ற முடியும் எனத் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து அதற்கும் அவரது பெற்றோர்களுக்கு கொண்ட நிலையில் மாணவியின் வயிற்றில் இருந்து ஆறு மாத சிசுவை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் எடுத்துள்ளனர்.

இதையடுத்து தொடர்ந்த மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து மாணவியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.இந்நிலையில் புகாரை பெற்ற காவல்துறையினர் மாணவியின் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.