தவறாக நடக்க முயன்ற மாணவன் தன் ஆசிரியையை கத்தியால் குத்திவிட்டு தலைமறைவான சம்பவமானது கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனிமையில் இருந்த ட்யூசன் டீச்சர்! இச்சைக்கு அழைத்த 11ம் வகுப்பு மாணவன்! பிறகு அரங்கேறிய விபரீதம்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம் என்னும் பகுதி அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட ஆலன்சோலை என்ற பகுதியில் அரசு பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் பணியாற்றிவரும் தற்காலிக ஆசிரியர் ஒருவர் வீட்டில் டியூஷனும் எடுத்து வருகிறார்.
அவருடைய வீட்டிற்கு டியூஷன் வரும் 11-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் ஆசிரியையின் மீது தவறான எண்ணம் வைத்திருந்தார். சில நாட்களுக்கு முன்னர் ஆசிரியை வீட்டில் தனியாக இருந்தபோது அவரை பாலியல் ரீதியில் ஒத்துழைக்குமாறு வற்புறுத்தியுள்ளார்.
ஆசிரியை மறுப்பு தெரிவித்ததால் அவரை கட்டாயப்படுத்தி முயற்சித்தார். இறுதிவரை ஆசிரியை இணங்கவில்லை. ஒரு கட்டத்தில் ஆசிரியை கூச்சல் போட தொடங்கினார். பயந்து போன மாணவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆசிரியை சரமாரியாக குத்தியுள்ளார். பின்னர் அங்கிருந்து மாணவர் தப்பியோடிவிட்டார்.
ஆசிரியையும் தொடர் கூச்சலை கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். பின்னர் நிகழ்ந்த சம்பவம் குறித்து ஆலன்சோலை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தலைமறைவாகியுள்ள மாணவனை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த சம்பவமானது மார்த்தாண்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.