49 வயது நபரின் வயிற்றுக்குள் 111 ஆணிகள்! ஆப்பரேசன் செய்த மருத்துவர்கள் மயங்கி விழுந்த பரிதாபம்!

கேரள மாநிலத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளியின் வயிற்றிலிருந்து 111 ஆணிகளை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்துள்ளனர்.


இந்நிலையில் மேலும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதுகேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த 49 வயது மதிக்கத்தக்க தொழிலாளி ஒருவருக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்ட அந்த நபரை அவரது உறவினர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் வயிற்றுவலி குணமாகாத நிலையில் அவரது வயிற்றை ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரது வயிற்றை ஸ்கேன் செய்த மருத்துவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது அவரது வயிற்றில் 111 இரும்பு ஆணிகள் இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அவரது உறவினர்களும் விசாரித்த போது சில வருடங்கள் முன் இந்நிலையில் கூலித் தொழிலாளியாக பணியாற்றிய போது அவருக்கு சிறிது மனநலம் பாதிக்கப்பட்டதுஇந்நிலையில் அவரை வீட்டில் வைத்து சிகிச்சை அளித்து வந்ததாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர். வீட்டில் யாரும் இல்லாதபோது வெளியே சென்று ரோட்டில் கிடக்கும் ஆணிகளை விழுங்கி இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இதுவரை யாருக்கும் தெரியாத நிலையில் தற்போது வயிற்றுவலி ஏற்பட்டதால் தான் மருத்துவமனைக்கு அழைத்து வந்ததாக தெரிவித்துள்ளனர். மருத்துவமனைக்கு வந்த நாள் தான் அவரது வயிற்றில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வயிற்றில் உள்ள ஆணைகளை அகற்றிய மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவரது உடல்நிலை நன்றாக உள்ளதா என மருத்துவத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.