1100 ஆண்டுகளுக்கு முன்னர் மண்ணில் புதைத் பழைமையான சிவலிங்கம் கண்டுபிடிப்பு..! ஆனால் இந்தியாவில் இல்லை..! எந்த நாட்டில் தெரியுமா?

1100 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் செய்தியானது வியட்நாம் நாட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


வியட்நாம் நாட்டில் குவாங் நாம் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இதற்குட்பட்ட மை சன் இந்திய தொல்லியல் துறை ஆய்வாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 1100 ஆண்டுகள் பழைமையான சிவலிங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மாகாணத்தில் சாம் கோவில் என்ற மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலானது யுனெஸ்கோ உலக புராதான பகுதியாக அறிவிக்கப்பட்ட இடமாகும். இந்த கோவிலை கெமர் பேரரசு மன்னரான 2-ஆம் இந்திரவர்மன் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கோவில் வளாகத்தில் கடந்த சில மாதங்களாக இந்திய தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். அவ்வாறு நடத்தப்பட்ட ஆய்வில் 9-ஆம் நூற்றாண்டு காலத்தில் ஒரே கல்லால் வடிவமைக்கப்பட்ட சிவலிங்கம் மண்ணுக்குள் புதைந்திருப்பதை கண்டறிந்தனர். அதன்பின் அதனை மண்ணிலிருந்து வெளியே எடுத்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில்,  "வியட்நாமில் நம்முடைய தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள் இந்த சிறந்த கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ளனர். இந்த கண்டுபிடிப்பினால் இந்தியா மற்றும் வியட்நாம் இடையே கலாச்சார உறவு மேம்படும் என்றும், இரு நாடுகளுக்கிடையேயான பண்டைய காலத்தில் நாகரீக நட்பு வெளிப்பட்டுள்ளது" என்றும் கூறியுள்ளார்.

இந்த செய்தியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.