குழந்தை பெற்று சில நாட்கள்..! இளம் பெண் கழுத்தில் கயிறு கட்டி தொங்கவிட்ட கொடூரம்! காதலானல் ஏற்பட்ட பயங்கரம்! அதிர வைக்கும் காரணம்!

பிரிட்டனில் குடும்பத் தகராறு காரணமாக காதலியை கொடூரமா கொலை செய்ய முயன்றவருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கி உள்ளது.


காஸில்ஃபோர்ட் பகதியில் பெத்தானி மெர்சன்ட் என்ற பெண்ணும் ராணுவ வீரரான ஸ்டீபன் என்பவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். மதுபான விடுதியில் மலர்ந்த நட்பு பின்னர் காதலமாக மாறி திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்துள்ளனர். ஒருவருக்கு ஒருவர் பரிசுகள் வழங்குவதும், ஊர் சுற்றுவதும் உல்லாசமாக இருப்பதும் என தங்களது காதலை நங்கூரம் போட்டு வளர்த்து வந்துள்ளனர்.

எந்த விஷயத்திற்காகவும ஸ்டீபன் கோபப்படுவதில்லை எனவும், எதற்கும் எதிர்த்து பேசமாட்டார் எனவும் மிகவும் அண்ணியோன்யமாக வாழ்ந்த வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென ஒருநாள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. காதலி பெத்தானியாவை பார்த்து உன்னைவிட மற்ற பெண்கள் எவ்வளவோ மேல் என ஏளனமாக பேசியதாக தெரிகிறது. 

பின்னர் தன்னையும், குழந்தையையும் கொன்றவிடுவதாக ஸ்டீபன் மிரட்டியதாகவும் தன்னை தலையணையால் அமுக்கி கொல்ல முயன்றதாகவும் பெத்தானியா தெரிவித்தார். பின்னர் தலையணை அமுக்கியதால் மூச்சுத் திணறிய தன்னை ஒரு அறைக்குள் இழுத்து சென்று கழுத்தில் கயிறால் கட்டி தூக்கில் தொங்கவிட்டதாகவும் அதிலிருந்து அவரே பின்னர் தம்மை மீட்டதாகவும் போலீசாரிடம் பெத்தானியா தெரிவித்தார்.

இது குறித்து பெத்தானியா தந்த புகாரில் சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரித்து வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த லீட்ஸ் கிரவுன் நீதிமன்றம் ராணுவ வீரர் ஸ்டீபனுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.