இயற்கை உபதையை கழிக்கச் சென்ற 11வயது சிறுமி! நிர்வாணமாக மீட்கப்பட்ட பயங்கரம்! நள்ளிரவில் நடந்தது என்ன?

உத்தரப் பிரதேச மாநிலத்தில் வீட்டுக்கு வெளியே உறங்கிய 11 வயதுச் சிறுமி நள்ளிரவில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், செங்கற்களால் தலை சிதைக்கப்பட்ட நிலையில் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.


உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவோ நகரைச் சேர்ந்தவர் அந்தச் சிறுமி. சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தனது மகள் இரவில் வீட்டுக்கு வெளியே உறங்கியதாகவும், நடு இரவில் எழுந்து பார்த்தபோது தனது மகளைக் காணவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்றிருக்கக் கூடும் என கருதி காத்திருந்த நிலையில் வெகு நேரம் ஆகியும் தனது மகள் வராததால் கலவரம் அடைந்து குடும்பத்தினர் அனைவரும் தேடத் தொடங்கியதாகக் கூறியுள்ளார். 

இந்நிலையில் அருகில் உள்ள பழத் தோட்டம் ஒன்றில் தனது மகளின் உடல் நிர்வாண நிலையில் கிடந்ததாகவும் செங்கற்களைக் கொண்டு தலை சிதைக்கப்பட்டிருந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் தனது மகளின் கழுத்திலும், பிறப்புறுப்பைச் சுற்றிலும் காயங்கள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். 

அதன் பேரில் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், குற்றவாளி அல்லது குற்றவாளிகளை தேடி வருகின்றனர். அதேபோன்று ஆந்திர மாநிலம் ஓங்கோலில் 16 வயதுச் சிறுமி 6 பேரால் அறையில் அடைத்து வைக்கப்பட்டு 5 நாட்கள் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது. 

ஓங்கோல் பேருந்து நிலையத்தில் அந்தச் சிறுமி தனது தோழிக்காகக் காத்திருந்த போது குற்றவாளிகளில் ஒருவனான மைனர் சிறுவன் ஒருவன் அந்தச்  சிறுமியை சந்தித்து நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பேசியதாகவும், அந்தச் சிறுமியை அருகில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றதாகவும், கூறப்படுகிறது.

அங்கு ஏற்கனவே சிறுவர்கள் உள்ளிட்ட மேலும் 5 பேர் இருந்த நிலையில் அவர்கள் அந்தச் சிறுமியை ஒரு அறையில் 5 நாட்கள் அடைத்து வைத்து மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் 5 நாட்களுக்குப் பிறகு அங்கிருந்து தப்பிய சிறுமி மீண்டும் பேருந்து நிலையத்துக்குச் சென்ற போது அங்கிருந்த 2 போலீசாரிடம் தனது நிலையைக் கூறினார். 

இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்புடைய 6 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.