துவங்கியது புரட்சி..! மகளை கற்பழித்தவனை அடித்தே கொலை செய்த தந்தை மற்றும் உறவினர்கள்..! எங்கு தெரியுமா?

பெங்களூரு: 11 வயது சிறுமியை வன்புணர்வு செய்த முதியவரை, சிறுமியின் உறவினர் கொலை செய்தார்.


கர்நாடகா மாநிலம், நேவல்குண்ட் பகுதியை சேர்ந்தவர் ஹகுஷாப் நடாஃப். 55 வயதான இவர், அப்பகுதியில் துணிக்கடை ஒன்றை நடத்தி வந்தார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகலில் அதே பகுதியில் வசிக்கும் 11 வயது சிறுமி ஒருவரை தனது கடைக்குள் அவர் அழைத்துச் சென்றாராம். இதன்பேரில் சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரது கடைக்குள் சென்று பார்த்துள்ளனர்.

அப்போது, சிறுமியும், ஹகுஷாப்பும் அலங்கோலமான நிலையில் இருந்துள்ளனர். இதையடுத்து, அவர்களை பரிசோதித்ததில் சிறுமியை ஹகுஷாப் வன்புணர்வு செய்ததாக உறுதியானது. இதன்பேரில் அவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்த பொதுமக்கள் பிறகு போலீசில் ஒப்படைத்தனர்.  

  இதுபற்றி போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர். சம்பந்தப்பட்ட சிறுமி மற்றும் பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த ஹகுஷாப் ஆகிய 2 பேரையும் நேவல்குண்ட் அரசு மருத்துவமனையில் சேர்த்து போலீசார் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை நேரம், சிறுமியின் உறவினர் எனக் கூறியபடி ஒரு நபர் மருத்துவமனைக்கு வந்தார்.

அவர் திடீரென போலீஸ் பாதுகாப்பை மீறி, ஹகுஷாப்பை கத்தியால் சராமரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த ஹகுஷாப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். சிறுமியை வன்புணர்வு செய்ததற்கு பழிவாங்கும் நோக்கில் இதனைச் செய்ததாக, அந்த நபர் போலீசில் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் நேவல்குண்ட் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.