இங்க வாயேன்..! விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை அழைத்த நபர்..! நம்பிச் சென்றவருக்கு வீட்டு வாசலில் ஏற்பட்ட பகீர் சம்பவம்!

ஈரோடு மாவட்டம் பவானியில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


எத்தனை என்கவுண்ட்டர் போட்டாலும் பெண்கள், சிறுமிகள் மீதான சீண்டல்கள் நின்றபாடில்லை. அன்றாடம் இதுபோன்று வரும் தகவல்கள் சாதாரண செய்தியாகவே கடந்து சென்று விடுகிறது. 

ஈரோடு மாவட்டம் பவானியில் கூலித் தொழிலாளியான ஒருவர், அவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இவர் வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டிருக்கும்போது சாலையோரத்தில் விளையாடிக் கொண்டிருந்த எதிர் வீட்டு 11 வயது சிறுமியை பார்த்து தன்னிடம் வருமாறு அழைத்துள்ளார்.

என்னவென்று தெரியாத அந்த சிறுமி எதிர் வீட்டில் வசிப்பவர்தானே என்று அருகில் வந்துள்ளார். இதை அடுத்து அந்த தொழிலாளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பயந்து போன அந்த சிறுமி கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

சிறுமியின் தாய் அதிர்ச்சி அடைந்து தொழிலாளியிடம் சண்டை போட்டார். இதையடுத்து கூலித் தொழிலாளியும் சிறுமியின் தாயிடம் தகராறில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறை தொழிலாளி விசாரித்து பின்னர் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.