வயதுக்கு வந்த 3வது நாளில் வல்லுறவுக்கு ஆளான சிறுமி! சுயநினைவை இழந்து துடி துடித்த பயங்கரம்!

11 வயது மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமையால் சுயநினைவை இழந்து மருத்துவமனையை அனுமதிக்கப்பட்ட சம்பவம் கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


6-ஆம் தேதியன்று கோவை அரசு மருத்துவமனையில் 11 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அந்த மாணவி பீளமேடு பகுதியில் வசித்து வருகிறார். மூன்று நாட்களாக மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர் அனுமதிக்கப்பட்ட மறு நாளிலேயே அவர் சுயநினைவை இழந்துவிட்டார்.

சுயநினைவை இழந்த நிலையிலேயே மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இது தொடர்பாக கோவை மாவட்டத்தின் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பீளமேடு பகுதி மக்கள் அந்த மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சுயநினைவை இழந்துவிட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்தப்பெண் பூப்படைந்து மூன்று நாட்களே ஆனதால் வழக்குப்பதிவு செய்யாமல் காத்திருந்தனர். நேற்று எதிர்பாராதவிதமாக அந்த சிறுமி அரசு மருத்துவமனையில் இறந்து போனார். பீளமேடு பகுதியினர் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.