11 வயது சிறுவனை கடத்திச் சென்று 17 வயது இளம் பெண் செய்த விபரீத செயல்!

சிறுவனை கடத்திய 17 வயது இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.


மகாராஷ்டிர மாநிலம், தாணேவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள சாந்தி நகர் போலீசாரிடம், அப்பகுதியில் டெய்லராக பணிபுரியும் பெண் ஒருவர் புகார் கூறினார். அதில், தனது 11 வயது மகனை, யாரோ ஒருவர் கடத்திவிட்டதாகவும், ரூ.6 லட்சம் பணம் கேட்டு ஃபோனில் மிரட்டுவதாகவும் கூறியிருந்தார்.

இதன்பேரில், போலீசார் அந்த பெண்ணை அழைத்துக் கொண்ட கடத்தல்காரர் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றனர். ஆனால், அங்கே பெண்ணின் மகன் மட்டும் அழுதுகொண்டு நின்றிருந்ததை கண்டதும், சிறுவனை மீட்டு போலீசார் விசாரித்தனர். 

அப்போது, டியூசன் சென்றுவிட்டு, வீடு திரும்பும் வழியில் ஒரு ஆன்ட்டி தன்னை கடத்தியதாகவும், அவரை ஏமாற்றிவிட்டு தப்பியோடி வந்துவிட்டதாகவும் சிறுவன் தெரிவித்தான். அந்த பெண் தன்னை கடத்த பயன்படுத்திய பைக்கை சிறுவன் சுட்டிக்காட்டினான்.

இதையடுத்து, அந்த பைக் மீது கைப்பை ஒன்றை போலீசார் வைத்தனர். அதை திடீரென அங்கே வந்த 17வயது இளம்பெண் எடுத்துள்ளார். உடனே அவரை சுற்றி வளைத்து பிடித்த போலீசார், அவர்தான் சிறுவனை கடத்தியவர் என கண்டுபிடித்தனர். இதன்பேரில், வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.