வீட்டு சமையல் அறையில் 11 அடி நீள முதலை! அதிர்ச்சியில் உறைந்த பெண்!

11 அடி நீளமான முதலை வீட்டின் சமையல் அறைக்குள் நுழைந்து தும்சம் செய்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியது.


அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்ற்கு உட்பட்ட டாம்பா பே பகுதியில், குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ராட்சத முதலை யாரும் எதிர்பாரத விதமாக அங்குள்ள ஒரு வீட்டின் உள் புகுந்துள்ளது, கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலை தூங்கி கொண்டிருந்த பெண் திடீரென ஏற்பட்ட சத்தத்தினால் முழித்து வெளி வந்தார்..

சத்தம் கேட்டு வந்த பெண் வீட்டின் சமையலறையில் நடமாடிய ராட்சத முதலையை கண்டு அதிர்ச்சி அடைந்தார், இதனை அடுத்து உடனடியாக காவல் துறைக்கு அளித்த தகவலின் பேரில் உடனடியாக வந்து முதலையை மீட்டனர்.

சுமார் 11 அடி நீளமுள்ள அந்த முதலை வீட்டின் கீழ்ப்பகுதியில் உள்ள ஜன்னல் வழியாக வந்திருக்கலாம் என கூறப்படுகிறது, ஜன்னல்களை கூட அந்த முதலை சிதற அடித்திருந்தது. மேலும் அந்த முதலை மிகவும் ஆக்ரோசமாக இருந்தது.