உடல் முழுவதும் ரத்தம்! முகத்தில் பிளாஸ்டிக் கவர்! ஸ்கூல் ரெஸ்ட் ரூமில் மாணவிக்கு ஏற்பட்ட விபரீதம்!

கொல்கத்தாவில் பிரபல பள்ளி ஒன்றில் 10-ஆம் வகுப்பு மாணவி கை மணிக்கட்டு அறுக்கப்பட்ட நிலையிலும், தலையை மூடிய பையுடனும் கைகழுவும் அறையில் இறந்து கிடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இறந்த மாணவி வகுப்பறையிலேயே முதல் மாணவி என்று கூறப்படுகிறது. அந்த மாணவி பிற்பகல் 1.40 மணியளவில் கைகழும் அறைக்குச் சென்ற நிலையில் 20 நிமிடங்களுக்குப் பிறகும் திரும்பி வராததால் சக மாணவிகள் தேடத் தொடங்கினர். அப்போது மாணவி கை கழுவும் அறையில் அசைவற்ற நிலையிலும், ரத்தம் வழிந்த நிலையிலும் கிடந்தது தெரியவந்தது. 

சூழலைப் பார்த்த போது அந்த மாணவி கை மணிக்கட்டை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதற்கான வாய்ப்புகள் தெரிந்தன. மேலும் மணிக்கட்டை அறுத்துக் கொள்ளும் போது தனது சத்தம் வெளியில் கேட்கக் கூடாது என்பதற்காக முகத்தை பிளாஸ்டிக் பையால் மூடிக்கொண்டிருக்கக் கூடும் என்றும் கருதப்படுகிறது. 

எனினும் தற்கொலை என்ற கோணத்திலேயே விசாரணை நடத்தாமல் வேறு கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில் பள்ளிகளில் கை கழுவும் அறைக் கதவு உள்ளிட்ட இடங்களில் சி.சி.டி.வி. காமிராக்கள் பொறுத்த வேண்டும் என்றும், ஊழியர்கள் அவ்வப்போது கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தல்கள் எழுந்துள்ளன.