சந்திராயன்-2 விண்கலம் தரை இறங்குவது பிரதமர் மோடியுடன் காண்பதற்கு உத்தரப்பிரதேசத்தில் மாணவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நிலவில் தரை இறங்கும் சந்திரயான் 2! மோடியுடன் நேரலையில் பார்க்கப்போகும் மாணவி! எப்படி தெரியுமா?

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அமைப்பு சார்பில் விக்ரம் விண்கலம் அனுப்பப்பட்டது. சந்திராயன்-2 விண்கலமானது ஜூலை மாதம் 22-ஆம் தேதியன்று அனுப்பப்பட்டது. விக்ரம் விண்கலம் நிலவின் தென் துருவத்தை வரும் 7-ஆம் தேதியன்று சென்றடையும்.
இந்த சம்பவத்தை காண்பதற்காக பெங்களூருவிலுள்ள இஸ்ரோ மையத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது பிரதமர் அவர்களுக்காக பிரத்தியேகமாக செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகள் ஆகும். பிரதமருடன் பள்ளி மாணவ- மாணவிகளும் இதனை காண்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்காக ஆன்லைன் குவிஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. ஒவ்வொரு மாநிலத்திலும் 2 மாணவர்களை தேர்வு செய்வதற்காக இந்த போட்டி நடைபெற்றது. அறிவியல் மற்றும் விண்கலம் தொடர்பாக போட்டிகள் நடைபெற்றன. இதில் ரவிவர்மா என்ற உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த மாணவி முதலாவதாக தேர்ச்சி பெற்றார்.
இந்த மாணவி டெல்லி பப்ளிக் பள்ளியில் படித்து வருகிறார். பிற மாநிலத்தை சேர்ந்தவர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.