16 வயது சிறுமியை கட்டிப்போட்டு உயிரோடு எரித்த அதிமுக பிரமுகர்கள்..! விழுப்புரம் திக் திகில் சம்பவம்!

10-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் அவருடைய வீட்டிலேயே பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவமானது திருவெண்ணெய்நல்லூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணைநல்லூர் என்ற இடம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட சிறுமதுரை கிராமத்தில் 16 வயதான பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி பயின்று வந்தார். இவருடைய தந்தைக்கும், சித்தப்பாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவருடன் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. 

முன்விரோதம் காரணமாக ஏற்கனவே, பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் சித்தப்பா முருகன் மற்றும் அவரது கூட்டாளிகளால் கொலை செய்யப்பட்டார். அந்த கொலை குறித்த வழக்கானது தற்போது நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அவ்வப்போது இரு பிரிவினரிடையே கடுமையான மோதல்கள் செயற்பட்டு வந்தன.

இதற்கிடையே நேற்றிரவு முருகன் மற்றும் அவரது கூட்டாளிகள் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் வீட்டிற்கு தீ வைத்துள்ளனர். அதோடு இல்லாமல் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் உடலை பெட்ரோல் ஊற்றி உயிருடன் தீ வைத்து எரித்துள்ளனர்.

உடனடியாக பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை அவருடைய குடும்பத்தினர் மீட்டெடுத்து மருத்துவமனையில் அனுமதித்தனர். 95% தீக்காயங்களுடன் அந்த இளம்பெண் அரசு மருத்துவமனையில் உயிருக்கு போராடி வந்தார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவமனை சார்பாக கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவமானது திருவெண்ணைநல்லூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.