கையில் எடுத்து, அப்படியே பிசைந்து எம்எல்ஏ வாயில் ஊட்டிவிட்ட இளம் மாணவி! வைரல் புகைப்படம்! என்ன, ஏன் தெரியுமா?

தெலுங்கானாவில் எம்எல்ஏவுக்கு பத்தாம் வகுப்பு மாணவி உணவை ஊட்டி விட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.


தெலுங்கானா மாநிலம் கான்பூர் தொகுதி எம்எல்ஏ ராஜையா. இவர் ஆளுங்கட்சியான டி ஆர் யெஸ் கட்சியை சேர்ந்தவர். அப்பகுதியில் உள்ள சில்பூர் என்னும் ஊரின் பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் பணி நிறைவு பெற இருந்தார். அவரது பிரிவு உபசார விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் ராஜையா.

இந்த விழாவில் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் ஆசிரியர்களுக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவின் முடிவில் நாற்காலியில் எம் எல் ஏ அமர்ந்திருக்க பத்தாம் வகுப்பு மாணவி தனது கைகளால் உணவை எடுத்து பிசைந்து அதை எம்எல்ஏவுக்கு ஊட்டி விட்டார்.

அவர் அருகில் அவரது உதவியாளர் தண்ணீர் பாட்டிலுடன் நின்று கொண்டிருந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலை தளத்தில் வெளியிடப்பட டிஆர்எஸ் கட்சியின் எதிர்ப்பாளர்கள் சிலர் இது குறித்து விமர்சனம் செய்தனர்.

இதற்கு பதிலளித்த எம்எல்ஏ ராஜையா. பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற அந்த மாணவி தனக்கு உணவை ஊட்டி விட விருப்பப்பட்ட தாகவும் ஆகையால் நான் அவரை எனது மகளாக ஏற்று உணவை ஊட்டி விட அனுமதித்ததாகவும் தெரிவித்துள்ளார். பத்தாம் வகுப்பு மாணவி எம்எல்ஏவுக்கு உணவு ஊட்டிவிட்ட வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.