10ம் வகுப்பு பிரச்னை முடிஞ்சாச்சு... இனிமேல் இணையவழிக் கல்வியை நிறுத்தணும்..! ஐடியா கொடுக்கும் மருத்துவர்.

மக்கள் நலனுக்காக அவ்வப்போது பதிவுகள் போட்டு வருபவர் மனநல மருத்துவர் டாக்டர் ருத்ரன். அவருடைய இன்றைய பதிவு, அடுத்த ஆபத்தை விளக்குகிறது.


ஒரு வழியாக நம் பத்தாம் வகுப்பு மாணவர்க்கும் அவர்களின் பெற்றோர்க்கும் கொடுத்து வந்த குழப்பமான கொடுமை முடிவுக்கு வந்து விட்டது. ஒரே நாளில் அரசுக்கு ஞானோதயம் வந்ததில் மகிழ்ச்சி.

குழந்தைகளின் படிப்பு விஷயத்தில் இன்னொரு சிக்கல் மெதுவாகப் பரவி வருகிறது. ஷீஸீ-றீவீஸீமீ வகுப்புகள் எடுக்கிறோம் என்று பள்ளிகள் இயங்குவது போல் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இயங்கினால்தான் கல்விக்கட்டணம் வாங்க முடியும். பல குழந்தைகளுக்காக அம்மாக்கள் படிக்கிறார்கள்.

குழந்தைகள் அதிக நேரம் கணினி அல்லது செல்பேசித் திரைகளைப் பார்த்துக் கொண்டிருப்பது சரியல்ல என்று இதுவரை சொல்லிக் கொண்டிருந்த கண்மருத்துவர்கள், பெற்றோர், சமூகச் சிந்தனையாளர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவோ, எச்சரிக்கை விடுப்பதாகவோ தெரியவில்லை.

இதன் தாக்கம் பின்னால் தான் தெரியும். அதற்குமுன் இணையவழிக் கல்வியை நெறிப்படுத்துவது அவசியம்.