அப்போ ரொம்ப கஷ்டம்..! படிக்க முடியல..! 105 வயசுல 4ம் வகுப்பு பாஸ் ஆன சூப்பர் பாட்டி! நம் அனைவருக்கும் ஒரு இன்ஸ்பிரேசன்..!

கேரளாவில் கொல்லம் பகுதியை சேர்ந்த பகிரதி அம்மாள். 105 வயதில் 4ஆம் வகுப்பு தேர்வு எழுதி வெற்றியும் பெற்றுள்ளார்.


பகிரதி அம்மாவின் குழந்தை பருவத்தில் தந்தை இறந்தாலும், குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளி படிப்பை தொடர முடியவில்லை. பின்னர் திருமணம் ஆகிய குடும்பத்தையும் தனது அர்ப்பணித்து பார்த்தால் தனது பள்ளி படிப்பு கனவு நிறைவேறாமல் போயிற்று. 

இந்த நிலையில், கேரளா அரசு ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அந்த திட்டத்தின் மூலம் அனைத்து வயது மக்களும் கல்வி கற்க முடியும். இதனை அறிந்த அந்த அம்மா தனது பள்ளி படிப்பு கனவை கேரளாவின் எழுத்தறிவு கல்வி இயக்கம் நடத்திய சமச்சீர் தேர்வில் கலந்து கொண்டார். 

இந்த தேர்வில், பாகிரதி அம்மா மட்டும் இன்றி மொத்தம் 19 ஆயிரத்து 950 பேர் கலந்து கொண்ட , இந்த தேர்வில் இளம் வயது உடையவர்களும் கலந்து கொண்டனர். இவ்வளவு பேர் கலந்து கொண்ட இந்த தேர்வில் , பாகிரவி அம்மா தேர்வு எழுதி வெற்றி பெற்றும் உள்ளார். 

மேலும், இதற்கு முன்பு இந்த தேர்வில் கலந்து கொண்ட அதிக வயதுடையவர் ஆழப்புலா மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்தியயானி அம்மாள் (வயது 96). 43 ஆயிரத்து 300 பேர் கலந்து கொண்ட அந்த தேர்வில் அவர் 100க்கு 98 மதிப்பெண்கள் பெற்று முதல் மாணவியாக திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.