அத்திவரதர் பிரசாதத்தில் ஆயிரம் கோடி மோசடியா? அடேங்கப்பா தில்லுமுல்லு!

அத்திவரதரை தரிசனம் செய்யவில்லை என்றால், அவன் இந்துவே இல்லை என்று சொல்லாததுதான் குறை.


அதனாலோ என்னவோ, குடும்பம் குடும்பமாக அத்திவரதரை தரிசிக்க கிளம்பிச்சென்று நொந்து நூலாகி வருகின்றனர். இன்னும் சில நாட்களில் அத்திவரதரை பார்க்கவில்லை என்றால், அதன்பிறகு அவர் மீண்டும் நீருக்குள் போய்விடுவார். அதன்பிறகு அவரை பார்க்கவே முடியாது என்பதால் மக்கள் முண்டியடித்து வருகின்றனர். இந்த நிலையில் அத்திவரதர் பிரசாதம் விவகாரத்தில் மெகா மோசடி நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

நாற்பது வருடங்களாக குளத்து நீரில் இருந்த அத்திவரதரின் மீது பாசிகள் படிந்திருக்கும். இந்த பாசியானது  தெய்வ பிரசாதமாக பார்க்கப்படுகிறது. இதில் சிறிய அளவ் வீட்டில் வைத்திருந்தாலும் அந்த குடும்பத்தை நோய் நொடி அண்டாததுடன், ஐஸ்வர்யமும் பொங்கும் என்பது ஐதீகம்.

இந்த முறை சுமார் 40 கிலோ அளவுக்கு அத்திவரதர் உடலில் இருந்து பாசி வழித்தெடுக்கப்பட்டதாம். தமிழக அமைச்சரவையின் முக்கிய மனிதர்கள், உயரதிகாரிகள் உள்ளிட்ட வி.வி.ஐ.பி.க்கள் சிலருக்கு இது வழங்கப்பட்டுள்ளது. அதன் பின் பணத்துக்கு அது விற்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. 

இந்த பிரசாதத்தின் பலன் மிகப்பெரியது என்பதால் பணத்தால் மதிப்பிடவே முடியாது என்கிறார்கள். அதனால், இதன் மதிப்பு ஆயிரம் கோடிகளை கூட தொடுமாம். உள்ளூர் முக்கியப் பிரமுகர்களுக்கே கிடைக்காத இந்த பாசி பிரசாதம் வெளிநாட்டு மல்டி மில்லியனர்களுக்கு முறைகேடாக இன்றும் விற்கப்படுகிறதாம். 

சமீபத்தில் வெளிவந்திருக்கும் இந்த விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. முறைப்படி ஆய்வு நடத்தினால் யாரெல்லாம் மாட்டப் போகிறார்களோ... அந்த அத்திவரதருக்குத்தான் வெளிச்சம்.