உயிரோடு மண்ணில் புதைந்த 10 தொழிலாளர்கள்! வாய்க்கால் வெட்டிய போது கொடூரம்!

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் 10 பேர் உயிரோடு மண்ணில் புதைந்து பலியாகியுள்ளனர்.


தெலுங்கானா மாநிலம் நாராயண பேட்டை மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம் திலறு. இக்கிராம மக்கள் சுமார் 100 பேர் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் கால்வாய் ஒன்றை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

களிமண் நிறைந்த பகுதியில் அவர்கள் கால்வாய் வெட்டிக் கொண்டிருந்தனர். பாதியளவு வெட்டப்பட்ட கால்வாயிலிருந்து பத்துக்கும் மேற்பட்டோர் களி மண்ணை அள்ளி மேலே இருந்தவர்களிடம் கொடுத்துக் கொண்டிருந்தனர். அந்தக் களிமண் புதிதாக கட்டப்பட்டு வரும் கால்வாயின் ஓரத்தில் கொட்டப்பட்டு வந்தது. களிமண் என்பதால் அந்த மண் அப்படியே நகர்ந்து திடீரென கால்வாய்க்குள் இருந்த தொழிலாளர்கள் மீது விழுந்தது.

இந்த கோர விபத்தில் கால் வாய் விட்டுக் கொண்டிருந்த 10 பேர் சம்பவ இடத்திலேயே. சுமார் ஐந்து பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.