காதலனின் பிறப்பு உறுப்பை வெட்டி வீசிய பெண் டாக்டர்! 11 வருடத்திற்கு பிறகு அம்பலமான உண்மை! அதிர வைக்கும் சம்பவம்!

பெங்களூரு: வேறு பெண்ணை திருமணம் செய்த காதலனின் ஆண் உறுப்பை வெட்டிய காதலிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


பெங்களூருவைச் சேர்ந்தவர் பல் மருத்துவர் சயீதா (42 வயது). இவர் லிவிங் டுகெதர் முறையில் மிர் அர்ஷத் அலி என்பவருடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில், கடந்த 2008ம் ஆண்டு அர்ஷத் அலி அவரை விட்டுப் பிரிந்து, வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து ஆத்திரம் அடைந்த சயீதா, ஒரு விசயம் பேச வேண்டும் எனக் கூறி கோரமங்களாவில் உள்ள தனது கிளினிக் வரும்படி காதலனை அழைத்திருக்கிறார்.

அவரும் அங்கு சென்றபோது, ஜூஸில் போதை மருந்து கலந்து கொடுத்துள்ளார். இதில், காதலன் அர்ஷத் அலி போதையாகி மயங்க, அவரை உடனடியாக அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்துச் சென்று, பிறப்புறுப்பை சயீதா வெட்டி எடுத்துவிட்டார். இதன்பேரில், பாதிக்கப்பட்ட அர்ஷத் அலி போலீசில் புகார் அளிக்க, அவர்கள் இதுபற்றி வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கை விசாரித்த வந்த நீதிமன்றம், தற்போது உண்மையை கண்டறிந்துள்ளது.  

இதன்படி, ஆண் உறுப்பை வெட்டிய சயீதாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. அத்துடன், பாதிக்கப்பட்ட அர்ஷத் அலிக்கு, ரூ.2 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.