10 வருசமா தீராத தலைவலி..! ஓயாமல் வாந்தி..! காரணம் மூளைக்குள் இருந்த பன்றிப்புழு..! பரிசோதனை முடிவால் அதிர்ந்த டாக்டர்கள்!

டெக்சாஸ்: மூளையில் நாடாப்புழு இருந்ததால், அமெரிக்க நபர் ஒருவர் கடும் தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளார்.


டெக்சாஸ் மாகாணத்தைச் சேந்தவர் ஜிரார்டோ. கால்பந்து பிரியரான இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கால்பந்து போட்டி பார்க்கச் சென்றபோது திடீரென மைதானத்திலேயே வாந்தி எடுத்து மயங்கி விழுந்திருக்கிறார். அன்று முதலாக, அடிக்கடி அவருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டு வந்துள்ளது. 10 ஆண்டுகளாக, கடும் வாந்தி, மயக்கம், தலைவலி என மாறி மாறி அவதிப்பட்ட ஜிரார்டோ, இதுபற்றி மருத்துவ பரிசோதனை செய்ய தீர்மானித்தார்.  

மருத்துவ பரிசோதனை செய்தபோது ஒரு அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. ஆம், ஜிரார்டோவின் மூளையில் நாடாப்புழு கூடு கட்டி வசிப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இதனை இப்படியே விட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் எனக் கூறிய மருத்துவர்கள், உடனடியாக அறுவை சிகிச்சை செய்தனர். இதில், ஜிரார்டோ உடல்நலம் தேறினார்.  

10 ஆண்டுகளுக்கு முன், மெக்சிகோ சென்றபோது சரியாக சமைக்கப்படாத பன்றி இறைச்சியை சாப்பிட நேரிட்டதாகவும், அன்று முதல் இந்த பாதிப்பு தனக்கு நிகழ்ந்ததாகவும், ஜிரார்டோ குறிப்பிடுகிறார். வேகாத பன்றி இறைச்சியை சாப்பிட்டால் நம் உடலில் நாடாப்புழு வளரும் என்பது குறிப்பிடத்தக்கது.