கற்பழிப்பு! கொடூர கொலை! கிணற்றில் மிதந்த சடலம்! கொலையாளியை சிக்க வைத்த ஒத்த செருப்பு! சினிமாவை மிஞ்சும் திண்டிவனம் சம்பவம்!

ஒத்த செருப்பு படத்தில் ஒரு செருப்பை வைத்து குற்றவாளியை கண்டுபிடிப்பது போல் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவர் போலீசாரிடம் சிக்கியுள்ளார்.


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நல்லாளம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் 10 வது மகளான கவிதாஸ்ரீ தொடக்கப் பள்ளி ஒன்றில் 5ம் வகுப்பு படித்து வந்தார். 

கடந்த 3ம் தேதி கடைக்கு சென்ற சிறுமி பலமணிநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கவிதாஸ்ரீயின் தாய் துர்கா தேவி பிரம்மதேசம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வந்த நிலையில் சிறுமியின் வீட்டின் பின்புறம் உள்ள கல்குவாரி நீரில் கவிதாஸ்ரீ சடலமாக மீட்கப்பட்ர்.

உடற்கூறு ஆய்வறிக்கையில் கவிதாஸ்ரீ பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து குற்றவாளியை தேடிவந்த நிலையில் அந்த பகுதியில் ஒத்த செருப்பு கிடைத்தது. அந்த செருப்பு யாருடையது என சிறுமியின் தாயாரிடம் போலீசார் கேட்க, இந்த செருப்பு பக்கத்து வீட்டு கூலி தொழிலாளி மகேந்திரனுடையது என தெரிவித்தார்.

உடனே மகேந்திரனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவரிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில் மாணவி கவிதாஸ்ரீயை கற்பழித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதுகுறித்து மகேந்திரன் அளித்த வாக்குமூலத்தில் சிறுமியின் தந்தையுடன் இருந்த பகையை தீர்த்துக் கொள்ளவே அவரின் மகளை கற்பழித்து கொன்று வீசியதாக கூறியுள்ளார்.

ஆனால் அவசரமாக நான் செருப்பு போடாமல் வந்து விட்டதால் அந்த ஒத்த செருப்பு தன்னை காட்டிக் கொடுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். எனினும் மகேந்திரனின் வாக்குமூலத்தை ஏற்காத போலீசார் அவரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.