அந்த தாத்தா சாக்லேட் வாங்கி கொடுப்பார்..! பிறகு என் மேல கை வச்சி..! 10 வயது சிறுமியிடம் இச்சையை தீர்த்த 60 வயது கிழம்!

மதுரை தல்லாகுளம் பகுதியில் சிறுமிக்கு அடிக்கடி சாக்லெட் கொடுத்து முதியவர் பாலியல் துன்புறுத்தல் செய்த அதிர்ச்சி சம்பவம் வெளியானதை அடுத்து அந்த முதியவரை பொதுமக்கள் சராமரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.


மதுரையைச் சேர்ந்த 10 வயது சிறுமி 5ம் வகுப்பு படித்து வருகிறார். தாய், தந்தையை இழந்த சிறுமியை தாத்தா, பாட்டி வளர்த்து வருகின்றனர். இந்த சிறுமியிடம் பக்கத்து வீட்டில் இருக்கும் 60 வயது முதியவர் ஒருவர் பாசமாக பழகி உள்ளார். ஏதுமறியாத அந்த சிறுமி முதியவரின் நயவஞ்சக எண்ணம் தெரியாமல் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதையடுத்து அந்த சிறுமிக்கு சாக்லெட் கொடுத்த முதியவர் பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார். இது என்னவென்று சிறுமிக்கு சொல்ல தெரியாததால் யாரிடமும் சொல்லவில்லை. இதேபோல் அடிக்கடி சிறுமியை அழைத்து சாக்லெட் கொடுத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார் அந்த முதியவர். 

இதற்கிடையே சிறுமியை விடுதியில் தங்க வைத்து படிக்க வைக்க முடிவு செய்து அவளை விடுதிக்கு அழைத்து சென்றனர். அப்போது அவளுக்கு மருத்துவ பரிசோதனை செய்தபோது, சிறுமி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டிருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதுகுறித்து சிறுமியிடம் தீவிரமாக உறவினர்கள் விசாரித்தனர். அதன் பின்னர்தான் வீட்டின் அருகே இருக்கும் 60 வயது முதியவர் பல நாட்களாக பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள், பொதுமக்கள் முதியவரை பிடித்து சரமாரியாக அடித்ததில் ரத்தம் சொட்ட சொட்ட சரிந்து விழுந்தார். பின்னர் தல்லாகுளம் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட முதியவர் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஒருவேளை சிறுமியை விடுதியில் சேர்க்க அழைத்து செல்லாவிட்டால் மேலும் பல நாட்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சிறுமி ஆபத்தான கட்டத்திற்கு கூட சென்றிருக்கலாம்.